மின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழப்பு!

மிஹிந்தலை பகுதியில் மின்னல் தாக்கி மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இச் சம்பவம் நேற்றைய தினம் (11-08-2023) மாலை இடம்பெற்றுள்ளது.

மிஹிந்தலை, தம்மன்னாவ வெவையில் மீன்பிடிக்கச் சென்ற 7 பேர் கொண்ட குழுவில் மூன்று பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மின்னல் தாக்கி உயிரிழந்த 40 வயது மதிக்கத்தக்கவர்களின் சடலங்கள் தம்மன்னாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஅற்புதங்கள் நிறைந்த ஆடி அமாவாசை
Next articleசிறுவன் மீது கதவு விழுந்ததில் சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி!