உடவலவ நீர் பிரச்சினைக்கு தீர்வு கிட்டவில்லை!

சமனல குளத்தில் இருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டு 05 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் சில விளைநிலங்களுக்கு இதுவரை நீர் கிடைக்கப்பெறவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், ஏற்பட்டுள்ள பாரிய பயிர் சேதம் தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் அனைத்து நீர்த்தேக்கங்களையும் ஒரே இடத்தில் இருந்து கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 

Previous articleநுவரெலியா பிரதான வீதியில் கோர விபத்து!
Next articleகையடக்க தொலைபேசிக்கு ஒரு இலட்சம் ரூபா வரி அறவிட ஆலோசனை!