கையடக்க தொலைபேசிக்கு ஒரு இலட்சம் ரூபா வரி அறவிட ஆலோசனை!

கையடக்க தொலைபேசிக்கு ஒரு இலட்சம் ரூபா வரி விதிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தினியாவல பாலித தேரர் தெரிவித்துள்ளார்.

பன்னிபிட்டியவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பலமான உறுப்பினரான சுதத் சந்திரசேகரவின் வீட்டில் நடைபெற்ற பிரசங்கம் ஒன்றின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் தலைமைச் செயலதிகாரி சாகல ரத்நாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைவர் ரவி கருணாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இன்றைய சமூக வீழ்ச்சிக்கு மொபைல் போன்களே முக்கிய காரணம். இன்று பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவும், கணவன் மனைவி உறவும் தொலைந்தும், சமூகத்துடனான உறவும் இல்லாமல் போய்விட்டது.

திருட்டு, குற்றம், பலாத்காரம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் அனைத்தும் இந்த மொபைல் போன் மூலம் எளிதாக்கப்படுகிறது. அமைச்சர் செய்தால் அது பலிக்கும்.

முடிந்தால் அந்த மொபைல் போன்களை அகற்றவும். இல்லை என்றால் அனைவரும் குறைந்தது ஒரு லட்சம் வரி செலுத்த வேண்டும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்

Previous articleஉடவலவ நீர் பிரச்சினைக்கு தீர்வு கிட்டவில்லை!
Next articleஅகில இலங்கை ரீதியில் சாதனை படைத்த யாழ் மாணவன்