திருகோணமலையில் இரண்டரை வயது சிறுமிக்கு நிகழ்ந்த சோகம்!

திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமி பாம்பு கடிக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (13-08-2023) காலை கோமரங்கடவல, கல்யாணபுர பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வீட்டு வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது குறித்த சிறுவன் கதறியதை அடுத்து அங்கு சென்று பார்த்தபோது சிறுமிக்கு அருகில் பாம்பு நிற்பதை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த பாம்பு சிறுமியை கடித்ததால் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

இவ்வாறு பாம்பு கடிக்கு உள்ளான சிறுமி அதை பகுதியைச் சேர்ந்த நெதின தேனாஸ் எனவும் தெரியவருகிறது.

வெயிலுடன் கூடிய மழை பெய்தமையினால் இவ்வாறான சந்தர்ப்பங்கள் இடம்பெற்று வருவதாகவும் சிறார்களை பற்றை காடுகளுக்கு அருகில் விளையாடுவதற்கு அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் திருகோணமலை பொது வைத்தியசாலை சிறுவர் பிரிவின் பொறுப்பதிகாரி பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Previous articleயாழ் கோப்பாய் குடும்பஸ்தர் கொலை தொடர்பில் 6 சந்தேக நபர்கள் கைது!
Next articleஆற்றில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!