குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை!

மாத்தறையில் கூரிய ஆயுதங்களால் வெட்டிக் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

மாத்தறை தொடங்கொட பிரதேசத்தில் இன்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நபர்

ஒரு பிள்ளையின் தந்தையே (வயது 37) இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சந்தேகநபரைக் கண்டுபிடிக்கும் நோக்கில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleமின் வெட்டு தொடர்பான விசேட கலந்துரையாடல்!
Next articleஇரண்டு முறை தோல்வி தந்தையும் மகனும் தற்கொலை!