மின் வெட்டு தொடர்பான விசேட கலந்துரையாடல்!

  மின்சார விநியோகத்தை துண்டிக்காமல் இருப்பது தொடர்பாக முடிவு செய்வதற்காக இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

மின்சார விநியோகத்தை வெட்டுக்கள் இன்றி தொடர்ந்தும் பேணுவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் இதன்போது ஆராயப்படுள்ளது.

அவசியம் ஏற்பட்டால் டெண்டர் நடவடிக்கை

கலந்துரையாடலில் மின்சார சபை அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.

எனினும், எதிர்காலத்தில் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அவசியம் ஏற்பட்டால் டெண்டர் கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேவேளை திட்டமிட்ட மின்வெட்டு குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

Previous articleஎதிர்காலத்தில் வங்கிகளின் வட்டி வீதம் குறைவடையும்
Next articleகுடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை!