எதிர்காலத்தில் வங்கிகளின் வட்டி வீதம் குறைவடையும்

எதிர்காலத்தில் வங்கி வட்டி ஒற்றை இலக்கத்திற்கு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“வங்கி வட்டி மிக மோசமாக இருந்தபோது 34% ஆக இருந்தது. தற்போது அது 16 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக குறைந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்தினால் இது இன்னும் குறையும்.

ஒற்றை இலக்கத்திற்கு வருகிறது. அப்போது வங்கியை கையாள்வதும் உங்கள் தொழிலை விரிவுபடுத்த கடன் வாங்குவதும் எளிதாகிறது.” என குறிப்பிட்டுள்ளார். 

Previous articleஆற்றில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
Next articleமின் வெட்டு தொடர்பான விசேட கலந்துரையாடல்!