கல்வியங்காடு கொலை வழக்கில் கைதான நபர்களுக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு பகுதியில் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான 6 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் அழைக்கப்பட்டது.

இதன்போது, குறித்த 6 சந்தேகநபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று முன்தினம் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.

உயிரிழந்தவர், கோப்பாய் பகுதியில் உள்ள சிறுமி ஒருவருடன் முறையற்ற விதத்தில் நடத்துக்கொள்ள முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, அவரை சிலர் தாக்கி கொலை செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Previous articleஉயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் பரவும் தவறான தகவல்
Next articleசச்சித்ர சேனாநாயக்கவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிப்பு!