சச்சித்ர சேனாநாயக்கவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிப்பு!

ஆட்ட நிர்ணய சதி தொடர்பான குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சித்ர சேனாநாயக்கவுக்கு கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் 3 மாதங்களுக்கு வெளிநாடு செல்லத் தடை விதித்துள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி மன்றாடியார் நாயகம் திலிப பீரிஸினால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களின் பிரகாரம் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இரண்டு வீரர்களை, தொலைபேசி அழைப்புகள் மூலம் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடத் தூண்டியதாக சச்சித்ர சேனாநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.