வீடொன்றில் இடம்பெற்ற வெடி விபத்தில் 5 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் ஒரு வீட்டில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதில் 2 வீடுகள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தில் அந்த வீடுகளில் இருந்த 5 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

Previous articleசச்சித்ர சேனாநாயக்கவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிப்பு!
Next articleஇன்றைய ராசிபலன்15.08.2023