யாழ் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் வழங்கிய வாக்குமூலம்!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்குப் பகுதியில் கடந்த சனிக்கிழமை அடிகாயங்களுடன், நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் ஒரு வார காலமாக விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், எனது மகளுக்கு பாலியல் தொல்லை செய்ததால் முச்சக்கரவண்டி சாரதியை அடித்தேன் எனவும் கொலை செய்யவில்லை என பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பொலிஸில் வாக்கு மூலம் வழங்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

யாழ். கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்கு பகுதியில் நிர்வாண நிலையில் ஆண்ணொருவரின் சடலம் கடந்த சனிக்கிழமை அன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் செய்யப்பட்டவர்களில் ஒருவரான பெண் ஒருவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்ட நபர் கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதான சிறுமி ஒருவரை வழமையாக முச்சக்கரவண்டியில் பாடசாலைக்கு ஏற்றி இறக்கி வந்துள்ளார்.

இதனைப் பயன்படுத்தி குறித்த நபர் சிறுமியுடன் தவறாக நடந்ததாக சிறுமி, தனது தாயாருக்கு தெரிவித்த நிலையில் தாயாரே கொலை செய்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்தது.

இந்த நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சம்பவம் இடம்பெற்ற அன்று சிறுமியின் தாய் உட்பட 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மேலும் 4 ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறான நிலையில், சிறுமியின் தாயிடம் இடம்பெற்ற விசாரணையில் தான் குறித்த நபரைக் கொலை செய்யவில்லை, அடித்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தேக நபர்கள் ஆறு பேரும், யாழ்.நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Previous articleஇன்றைய ராசிபலன்15.08.2023
Next articleமூன்று ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம்