மூன்று ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம்

இலங்கையில் நேற்றைய தினம் (15-08-2023) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 3 சிரேஷ்ட அரச அதிகாரிகள் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, சிரேஷ்ட சட்டத்தரணிகளான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அஜித் மிலிந்த் பத்திரன, சட்ட வரைஞர் எஸ்.ஏ. தில்ருக்ஷி மற்றும் மேலதிக சட்ட வரைஞர் தமயந்தி குலசேன ஆகியோர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்கள் நேற்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

Previous articleயாழ் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் வழங்கிய வாக்குமூலம்!
Next articleவாகன இறக்குமதி தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!