கோழி இறைச்சியின் விலை குறைவடையும் சாத்தியம்

சோளத்திற்கான இறக்குமதி வரியை குறைப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையால் எதிர்காலத்தில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியை 1200 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இரண்டு வாரங்களுக்குள் சோளத்தை இறக்குமதி செய்ய வாய்ப்பு உள்ளதாக அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த சலுகைகள் மூலம் எதிர்காலத்தில் ஒரு முட்டையை 40 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் எனவும் அதன் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous articleமாயமான வர்த்தகர் கைது!
Next articleபுதிய கொரொனோ வைரஸை கண்காணிக்கும் உலக சுகாதார ஸ்தாபனம்