புதிய கொரொனோ வைரஸை கண்காணிக்கும் உலக சுகாதார ஸ்தாபனம்

அமெரிக்காவில் காணப்படும் மிகவும் மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் ஒன்றினை கண்காணித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

உலகசுகாதார நிறுவனம் கண்காணிக்கவேண்டிய வைரஸ்களின் பட்டியலில் சார்ஸ் கொவ்வி- 2 இன் புதிய பரம்பரையை சேர்த்துக்கொண்டுள்ளது.

 BA.2.86ஏற்கனவே அடையாளம்  காணப்பட்டுள்ளது என அமெரிக்காவின் நோய்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

டென்மார்க் இஸ்ரேலிலும் கொரோனா வைரசின் இந்த வகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இது குறித்தும் எவ்வளவு தூரம் இது பரவக்கூடியது என்பது குறித்தும் அறிந்துகொள்வதற்கு மேலும் தரவுகள் தேவைப்படுகின்றன உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

Previous articleகோழி இறைச்சியின் விலை குறைவடையும் சாத்தியம்
Next articleநாட்டிலிருந்து வெளியேறும் 5000 மருத்துவர்கள்