வெங்காயத்திற்கு விசேட வரி விதிப்பு!

கடந்த சில வாரங்களாகவே இந்தியாவில் வெங்காயத்தின் விலை அதிகரித்து வந்தது. வரும் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் பண்டிகை காலம் என்பதால் வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்த வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரியை உயர்த்தியுள்ளது மத்திய அரசு.

உள்நாட்டில் வெங்காய விநியோகத்தை மேம்படுத்துவதற்காகவும் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெங்காயம் மீதான இந்த ஏற்றுமதி வரி விதிப்பு வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு இந்தியா வெங்காயத்தை ஏற்றுமதி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய, இலங்கையில் இறக்குமதி வெங்காயத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous articleஇன்றைய ராசிபலன்20.08.2023
Next articleஇன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு!