இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு!

வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் பாலத்துக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் நெல்லியடி – கொடிகாமம் வீதியில் கலிகை பகுதியில்  இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக உள்ள உணவகம் ஒன்றைச் சேர்ந்த செல்வநாயகம் வின்சன் மனோஜ்குமார் (வயது 31), கரவெட்டி வதிரியைச் சேர்ந்த விஜயகாந்த் நிசாந்தன் (வயது 29) என்ற இருவரே உயிரிழந்தனர்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous articleவெங்காயத்திற்கு விசேட வரி விதிப்பு!
Next articleகொடுத்த கடனை கேட்க சென்றவர் மீது கொடூர தாக்குதல்!