யாழில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி !

யாழில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் இன்று (20) அதிகாலை இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலிகை பகுதியில் அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வளைவொன்றில் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக உள்ள உணவகம் ஒன்றைச் சேர்ந்த செல்வநாயகம் வின்சன் மனோஜ்குமார் (வயது 31), கரவெட்டி வதிரியைச் சேர்ந்த விஜயகாந்த் நிசாந்தன் (வயது 29) என்ற இருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!
Next articleபோதைக்கு அடிமையான கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்