தொலைபேசியில் உரையாடியவாறு ரயில் பாதையில் பயணித்த பெண் உயிரிழப்பு!

கையடக்கத் தொலைபேசியில் உரையாடியவாறு ரயில் பாதையில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவர் ரயிலால் மோதப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொட்டகலைக்கும் ஹட்டனுக்கும் இடையிலான பாலத்துக்கு அருகில் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த  ரயிலே குறித்த பெண்ணை மோதியுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் கொட்டகலை ரயில் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு   கொட்டகலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உயிரிழந்தவர் ஹட்டன், குடாகம பிரதேசத்தை சேர்ந்தவர் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

Previous articleபோதைக்கு அடிமையான கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்
Next articleமட்டக்களப்பில் வயோதிப பெண் மாயம்!