மட்டக்களப்பில் வயோதிப பெண் மாயம்!

மட்டக்களப்பில் தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான வயோதிப பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் தமக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காணாமல்போன பெண்

மட்டக்களப்பு, கருவப்பங்கேணி அம்பிறோஸ் வீதியைச் சேர்ந்த நடராசா கண்மணியம்மாவே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 24ஆம் திகதி வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரை உறவினர்கள் கடந்த இரண்டு மாதங்களாக தேடி வந்தபோதும் இவரை கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

எனவே இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் உடனடியாக 065-2224422 என்ற மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக இலக்கத்துக்கு தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Previous articleதொலைபேசியில் உரையாடியவாறு ரயில் பாதையில் பயணித்த பெண் உயிரிழப்பு!
Next articleகிளிநொச்சி மாவட்டத்தில் கணிதப்பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன் தேனுஜன் தற்கொலை!