கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் ஆயுதங்கள் மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (18) கிணறு சுத்தம் செய்யும்வேளை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பாக இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் நேற்று சனிக்கிழமை (19) தெரியப்படுத்தப்பட்டது. 

இதன்போது பழைய பி.கே.எல்.எம்.ஜி, ஏ.கே. ரவுன்ஸ்கள், 60 எம் செல் 5, டிக்னெட்கள், சாஜஸ்கள் என்பவற்றுடன் பழைய இலத்திரனியல் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleமட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் வறட்சி!
Next articleதர்ப்பூசணியில் யானைக்கு விஷம் கலந்து கொடுத்த நபர் கைது!