யாழில் உணவகம் ஒன்றில் ஒரு கோப்பை பால் தேநீர் விலை இவ்வளவா! கோபத்தில் மக்கள் !

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக உள்ள சைவ உணவகம் ஒன்றில் ஒரு கோப்பை பால் தேநீர் 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவினை முன்னிட்டு திருநெல்வேலியில் அமைந்துள்ள சைவ உணவகம் ஒன்று நல்லூர் ஆலயத்திற்கு அருகில் தனது கிளை நிறுவனம் ஒன்றினை ஆரம்பித்திருந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் (21-08-2023) காலை கொடியேற்ற உற்சவத்துக்கு சென்ற மக்கள் சிலர் அங்கு பால் தேநீர் பருக சென்றபோது ஒரு கோப்பை பால் தேநீர் 200 ரூபாக்கு விற்கப்படுவதாக தெரிவித்தனர்.

மேலும், நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் கூட ஒரு கோப்பை பால் தேநீர் இவ்வளவு விலைக்கு விற்கப்படவில்லை என குற்றம் சாட்டும் மக்கள் இவ்வாறு அதிக விலையில் விற்பனை செய்வதை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரும் கண்டுகொள்வதில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

இவ்வாறான நிலையில், சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு குறித்த உணவகத்தின் உணவு பொருட்களின் விலைகள் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous articleவவுனியா பூந்தோட்டம் மதுபானசாலையில் தாக்குதல் : இரு பிள்ளைகளின் தந்தை பலி – சந்தேகநபர் கைது!!
Next articleயாழில் அதி சொகுசு பேருந்து உட்பட 4 வாகனங்கள் மோதி விபத்து!