யாழில் அதி சொகுசு பேருந்து உட்பட 4 வாகனங்கள் மோதி விபத்து!

யாழ்ப்பாண பகுதியில் சாரதிகளின் கவனயீனம் மற்றும் அதிவேகம் காரணமாக விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இவ் விபத்து சம்பவம் ஏ9 பிரதான வீதியில் கொடிகாமம்,கொயிலாமனை சந்திக்கு அண்மையாக இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்றைய தினம் (20-08-2023) இரவு 11:30 மணியளவில் ஒரே தளத்தில் 4 வாகனங்கள் மோதிக் கொண்டன.

யாழ் – கொழும்பு அதிசொகுசு பயணிகள் பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து முன்னே பயணித்துக் கொண்டிருந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் பலத்த சேதங்களுக்குள்ளானது.

மேலும் விபத்தில் சிக்கிய அதிசொகுசு பயணிகள் பேருந்து பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

யாழிலிருந்து கொடிகாமம் பகுதி நோக்கிப் பயணித்த உழவியந்திரமும் எதிரே வந்த பாரவூர்தியும் மோதிக் கொண்டது.

குறித்த விபத்து தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Previous articleயாழில் உணவகம் ஒன்றில் ஒரு கோப்பை பால் தேநீர் விலை இவ்வளவா! கோபத்தில் மக்கள் !
Next articleஉயிர் தப்பிக்க ஓடிய பாடசாலை மாணவன் விழுந்து மரணம் !