நிலவில் இன்று கால் பதிக்க காத்திருக்கும் சந்திரயான் 3

சந்திரயான் 3 விண்கலம் இன்று நிலவில் தரையிறங்கவுள்ளது.

எனினும் குறித்த விண்கலம் நிலவில் தரையிங்குவதில் முன்னதாக அறிவிக்கப்ட்ட நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அறிவித்துள்ளது.

சந்திரயான் 3 என்ற விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பெங்களுரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள் தற்சமயம் வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பூமி சுற்றுவட்டப்பாதையை சுற்றி முடித்த பிறகு நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் விண்கலம் நுழைந்துள்ளது.

சந்திராயன் 3 விண்கலத்திலிருந்து, விக்ரம் லேண்டர் என அழைக்கப்படும் பகுதி தற்போது பிரிந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.