போலி ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்டவர் கைது!

போலி ஆவணங்களை தயாரித்த ஒருவர் கண்டி விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ பெயர், உள்ளிட்டவற்றை பயன்படுத்தி போலி ஆவணங்களை தயாரித்து 29 சிறுவர்களை கண்டியில் உள்ள  பெண்கள் வித்தியாலயத்தில் சேர்த்து மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி தர்மசோக மாவத்தையை சேர்ந்த 45 வயதான சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் போது தவறான தகவல்களை உள்ளடக்கி கிராம சேவகர் சான்றிதழை வழங்கி இதற்கு ஆதரவளித்த தெய்ந்தர கிராம சேவகரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Previous articleநிலவில் இன்று கால் பதிக்க காத்திருக்கும் சந்திரயான் 3
Next articleஇன்றைய நாணய மாற்று வீதம்