போலி அடையாள அட்டையைக் கொண்டு கடன் பெற்ற அதிகாரிகள் கைது!

கொழும்பில் (Colombo) போலியான அடையாள அட்டையொன்றைப் பயன்படுத்தி தனியார் வங்கியொன்றில் 34 இலட்சம் ரூபா கடனை பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றிரவு (14.05.2024) இடம்பெற்றுள்ளது.

கொழும்பை சேர்ந்த ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான வசந்த கபுகொட்டுவ என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது நடவடிக்கை

பிரபலமான தனியார் வங்கியொன்றில் போலி அடையாள அட்டை மூலம் வங்கிக் கணக்கு ஒன்றை ஆரம்பித்துள்ள அவர், அதன் பின்னர் அதே அடையாள அட்டையைப் பயன்படுத்தி வங்கியிலிருந்து 34 இலட்சம் ரூபா கடன் பெற்றுக் கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த கொழும்பு குற்றத்த தடுப்புப் பிரிவின் பொலிஸார், நேற்றிரவு (14) சந்தேக நபரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை கைது செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் ஐம்பது இலட்சம் ரூபா இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.