சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைத்த டயானா கமகே

பதவி இழந்த முன்னாள் சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே (Diana Gamage) தனது உத்தியோகபூர்வ வாகனங்கள் மூன்றையும் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அரச வாகனங்கள் மூன்றையும் கடந்த (10) ஆம் திகதி வெள்ளிக்கிழமை கையளித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் (21) ஆம் திகதி காகித ஆவணங்களை ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச சொத்துக்கள்

இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.

இதனால், அரசிடம் இருந்து பெற்ற வாகனங்கள் உட்பட அனைத்து சொத்துகளையும் அவர் ஒப்படைக்க வேண்டும்.

உத்தியோகபூர்வ இல்லம்
எவ்வாறாயினும், டயானா கமகே அமைச்சருக்கான உத்தியோகபூர்வ இல்லத்தை பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், கடந்த (11) ஆம் திகதி டயானா கமகேவுக்கு வெளிநாடு செல்லவும் உயர் நீதிமன்றம் தடைவிதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.