யாழில் துயரம்! பிறந்து 8 நாட்களேயான குழந்தை உயிரிழப்பு !

ஐந்து நாட்கள் தொடர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த, பிறந்து எட்டு நாட்களேயான குழந்தை ஒன்று இன்றையதினம் (22) உயிரிழந்தது.

குறித்த குழந்தை பிறந்து மூன்று நாட்களில் காய்ச்சலால் பிடிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி காலை நயினாதீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக அங்கிருந்து பிற்பகல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது.

இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தது. நயினாதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த மதிவதனன் சுதர்சாவிந் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

Previous articleமட்டக்களப்பில் கணவன் 7 தடவைகளுக்கு மேல் கட்டாய உறவு!! மனைவி விவாகரத்து விண்ணப்பம்!!
Next articleஇலங்கையை உலுக்கிய அழகிய இளம் பெண்ணின் மரணம்: நாடகமாடிய கணவன் 5 மாதங்களின் பின் கைது!