மனைவியின் தங்கையுடன் ‘ரூம் போட்ட’ அத்தானுக்கு வலை!

மனைவியின் இளைய சகோதரியை விடுதிக்கு அழைத்துச் சென்று வன்புணர்வு செய்த சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (21) பிற்பகல் ஹலவத்த நகரிலுள்ள தங்கும் விடுதி ஒன்றில் இந்தக் குற்றம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலாத்காரத்திற்கு உள்ளானவர் ஆனமடுவ பிரதேசத்தில் உள்ள 11ம் ஆண்டு பாடசாலை மாணவி என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த மாணவியின் சகோதரி திருமணமாகி ஹலவத்தை பிரதேசத்தில் வசிப்பவர் எனவும், மாணவி தனது அக்காவின் கணவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்த உறவின் காரணமாக சந்தேக நபர் மாணவியை விடுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

குறித்த மாணவி மருத்துவ பரிசோதனைக்காக ஆனமடுவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous article‘நிம்மதியாக உட்கார்ந்து பேசவும் விடமாட்டீர்களா?’: கிழக்கு பல்கலைக்கழக காதலர்களுக்கு நேர்ந்த சம்பவம்!
Next articleஉயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு !