யாழில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த 14 வயது சிறுவன் !

யாழில் டிப்பர் வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதி கொற்றாவத்தையில் இன்று (24) மதியம் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 14 வயதான சிறுவன் எரிந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தை தொடர்ந்து மோட்டார் சைக்கிள் தீப்பற்றியதோடு மோட்டார் சைக்கிளில் பயணித்த 14 வயதான சிறுவன் படுகாயமடைந்த நிலையில் தீயில் கருகி உயிரிழந்தார்.

22 வயதான முள்ளிவளையை சேர்ந்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Previous articleகரண்ட் பில் கட்டவில்லை என வீட்டு மின் இணைப்பை துண்டிக்க முற்பட்ட ஊழியரை நையப்புடைக்கும் காட்சிகள்!! வீடியோ
Next articleபாடுவதை பாதியில் நிறுத்திய அசானி; போட்டியை விட்டு வெளியேறுகின்றாரா? பரபரப்பான வீடியோ