பாடுவதை பாதியில் நிறுத்திய அசானி; போட்டியை விட்டு வெளியேறுகின்றாரா? பரபரப்பான வீடியோ

இலங்கை சிறுமி அசானி சரிகமப மேடையில் பாடும் போது பாதியில் நிறுத்திய ப்ரோமோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளியின் மகளான அசானிக்கு சில வாரங்கள் சரிகமப மேடையில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

கடந்த இருவாரங்களாக அவரின் பாடலை கேட்டு உலக வாழ் தமிழர்களும் ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இந்த வாரத்தின் ப்ரோமோ வெளியாகி அசானி போட்டியை விட்டு வெளியேறுகின்றாரா என்ற கேள்வியை எழுப்ப வைத்துள்ளது.

”ஒவ்வொரு பூக்களுமே..” பாடலை பாடிக் கொண்டிருக்கும் போது தடுமாறி நிறுத்தி விடுகின்றார். அவரை தொடர்ந்து பாடுமாறு நடுவர்கள் முதல் மொத்த அரங்கமும் உற்சாகப்படுத்துகிறது.

எனினும், படுவதை நிறுத்திய அசானி கண்ணீருடன் நிற்கின்றார்.

நிகழ்ச்சியில் தான் தெரியும் அவர் தொடர்ந்தும் பாடுகின்றாரா? அல்லது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகின்றார்.

Previous articleயாழில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த 14 வயது சிறுவன் !
Next articleயாழிலிருந்து விமான நிலையம் சென்ற அதி சொகுசு பஸ் தீப்பிடித்தது.. படங்கள்..!