யாழில் விபரீத முடிவை எடுத்து உயிரிழந்த 22 வயதான இளைஞன்!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலையடி தெற்கு பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவர் தவறான முடிவை எடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் 22 வயதான அருளானந்தம் லக்ஸன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளைஞன் வெளிநாடு ஒன்றுக்கு வேலைக்காக சென்றிருந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் வீட்டுக்கு வந்திருந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்றையதினம் (23-08-2023) வீட்டில் பணம் கேட்டு சண்டையிட்டதுடன், தண்ணீர் இறைக்கும் மோட்டாரை கிணற்றினுள் தூக்கி வீயுள்ளார். மேலும், வீட்டிலிருந்த பொருட்களையும் அடித்து உடைத்துள்ளார்.

இந்நிலையில் அவர் இன்றையதினம் (24-08-2023) மதியம் வீட்டிற்கு அருகேயுள்ள காணியொன்றில் உள்ள விளாத்தி மரத்தில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

மேலும், அவர் போதைக்கு அடிமையானவர் என அறியமுடிகிறது.

Previous articleசரிகமப நிகழ்ச்சியில் ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடல் மூலம் அழவைத்த ஈழக்குயில் கில்மிஷா..!
Next articleயாழ்.குடாநாட்டு வியாபாரிகள் கவலை !