தோட்டத்தில் வேலை செய்து விட்டு வீடு சென்றவர் மரணம்

யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில்  தோட்டத்தில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்தவர் வீதியில் விழுந்து மரணமடைந்த சம்பவம் ஒன்று வியாழக்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் வியாழக்கிழமை காலை 4.30 மணிக்கு குப்பிளான் தெற்கு பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் வேலை செய்துவிட்டு பிற்பகல் 1 மணியளவில் வீட்டுக்கு வரும்போது, வீதியில் விழுந்து உயிரிழந்தார்.

அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மாரடைப்பு காரணமாகவே அவரது மரணம் நிகழ்ந்ததாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

ஏழாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த இராசேந்திரம் நாகேஷ்வரன் (வயது 37) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Previous articleதடையின்றி குடிநீரை வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு!
Next articleஐஸ்வரியத்தை அள்ளித்தரும் வெள்ளிக்கிழமை வழிபாடு