இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு ‘கொவிட்’

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு ‘கொவிட்’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குசல் ஜனித் பெரேரா 3 நாட்களாக வைரஸ்  காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கும் மேற்கொள்ளப்பட்ட  சோதனையின் போது கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குசல் ஜனித் பெரேராவுடன் நெருக்கிப்பழகிய துடுப்பாட்ட வீரரொருவருக்கும் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள போதும், அவருக்கு கொவிட் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.