சஜித்தரப்பினருக்கு அழைப்பு விடுத்த ரவி கருணாநாயக்க

ஐக்கிய தேசியக் கட்சியை விட்டுசென்றவர்கள் மீண்டும் தாய்வீடு திரும்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க சஜித் தரப்பினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

“ஹரின் பெர்ணான்டோ, மனுச நாணயக்கார, ஹரிசன் ஆகியோர் மீண்டும் கட்சிக்குள் வந்துள்ளனர். இது மகிழ்ச்சியளிக்கின்றது. கட்சியை விட்டு சென்றவர்கள் மீண்டும் தாய்வீட்டுக்கு வாருங்கள்.

எவரையும் ஐக்கிய தேசியக் கட்சி வெளியேற்றவில்லை. அவர்களாகவே சென்றார்கள். எனவே மீண்டும் வருவதில் பிரச்சினை இருக்காது. சிலர் கறுப்பை, வெள்ளையாக்கி பிரச்சாரம் செய்தனர். இதனால்தான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாக்கம் ஏற்பட்டது. வாக்காளர்கள் நடுநிலை வகித்தனர்.

ஆனால் இன்று யதார்த்தம் புரிந்துள்ளது. அது வெள்ளை அல்ல கறுப்புதான் என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். கட்சியை பலப்படுத்த வேண்டும். பிளவுபட்டுள்ளவர்களை இணைக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்” எனவும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

Previous articleமின்சாரசபை விடுத்துள்ள எச்சரிக்கை!
Next articleயாழில் அயல்வீட்டு பெண்ணுக்கு அந்தரங்கத்தை காட்டிய நபர் மீது சுடுநீர் வீச்சு!