யாழில் அயல்வீட்டு பெண்ணுக்கு அந்தரங்கத்தை காட்டிய நபர் மீது சுடுநீர் வீச்சு!

யாழில் அயல்வீட்டு அரச உத்தியோகஸ்தரான பெண்ணுக்கு அந்தரங்கத்தை காட்டிய 60 வயதை கடந்த புலம்பெயர் தமிழர்மீது சுடுநீர் ஊற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் யாழ் நல்லூர் பிரதேசத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கனடா வாழ் புலம்பெயர் தமிழர் ஒருவர் கடந்த சில நாட்களின் முன்னர் மனைவியுடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். யாழ் நல்லூர் பகுதியில் உள்ளாவர் அவர்களது சொந்த வீட்டில் கணவனும் மனைவியும் தங்கியுள்ளனர்.

குறித்த நபரின் சகோதரியும் கனடாவில் வசித்துவரும் நிலையில் இருவரது வீடுகளும் அருகருகே அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன் இருகாணிகளுக்கும் பொதுவாக ஒரு கிணறே உள்ள நிலையில், சகோதரர்களுக்கு இடையில் இருக்கும் சண்டை காரணமாக இரு வீடுகளுக்குமிடையில் மதில் கட்டாது மேற்பகுதி தகரத்தால் கட்டப்பட்ட நிலையில் கீழ் பகுதி முள்ளுக்கம்பிகளால் வரியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சகோதரியின் வீட்டில் அரச உத்தியோகஸ்தர்களான கணவனும், மனைவியும் , பதின்ம வயது மகளும் வசித்துவருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கனடாவாழ் நபர் கிணற்றடியில் அரைகுறை ஆடையுடன், பெண் அரச உத்தியோகஸ்தர் குளிக்கையில் தானும் சென்று குளிப்பதை வழமையாக வைத்துள்ளார்.

அது தொடர்பில் அரச உத்தியோகஸ்தர், தனது கணவருக்கு தெரியப்படுத்திய நிலையில் இருவீட்டருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

கணவர் வேறொரு மாவட்டத்தில் வேலைபார்த்துவரும் நிலையில், அயலவர் தொடர்பில் மகளும் தாயிடம் முறைப்பாடு செய்ய , கனடா நபரின் தொந்தரவு தாங்கமுடியாத அரச உத்தியோகஸ்தரான பெண், அவரின் அந்தரங்க பகுதியில் சுடுநீர் ஊற்றியதாக கூறப்படுவதுடன், புலம்பெயர் நபர் செய்த வேலைகளையும் அப்பெண் காணொளி எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தை அடுத்து கணவர் அலறிய சத்தத்தில் அயல் விட்டு பெண்ணுடன் சண்டைக்கு சென்ற கனடா நபரின் மனைவி , பெண் காட்டிய காணொளியை அடுத்து , அங்கிருந்து சென்றதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

Previous articleசஜித்தரப்பினருக்கு அழைப்பு விடுத்த ரவி கருணாநாயக்க
Next articleவவுனியாவில் நீர் தொட்டியில் வீழ்ந்து 2 வயது குழந்தை பலி…!