வவுனியாவில் நீர் தொட்டியில் வீழ்ந்து 2 வயது குழந்தை பலி…!

வவுனியா – நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து 2 வயது பெண்குழந்தை ஒன்று மரணமடைந்தது.

நேற்று (25) மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
மாலை வீட்டு முற்றத்தில் குறித்த சிறுமி விளையாடிக்கொண்டிருந்தார்.

எனினும் சிறிது நேரத்தில் குழந்தையை காணாத நிலையில் பெற்றோர் அவரைத்தேடியுள்ளனர்.
இதன்போது குறித்த குழந்தை கிணற்றிற்கு அருகாமையில் இருந்த நீர்த்தொட்டியில் வீழ்ந்துள்ளமை கண்டறியப்பட்டது.

உடனடியாக மீட்கப்பட்ட சிறுமி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கும் முன்னரே குறித்த குழந்தை மரணமடைந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

குழந்தைக்காக பிரேதபரிசோதனையின் பின் குழந்தையின் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்திருந்த நிலையில் குழந்தையின் சடலம் இன்று காலை பெரும்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டது

Previous articleயாழில் அயல்வீட்டு பெண்ணுக்கு அந்தரங்கத்தை காட்டிய நபர் மீது சுடுநீர் வீச்சு!
Next articleகோழி இறைச்சி விலை 100 ரூபாவால் குறைப்பு