விளையாட்டு மைதான நெரிசலில் சிக்கி 12 போ் உயிரிழப்பு!

தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

தலைநகா் ஆன்டனானரிவோவிலுள்ள மஹாமாசினா விளையாட்டு அரங்கத்தில் இந்தியப் பெருங்கடல் தீவுப் போட்டியின் தொடக்க விழை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதனைப் பாா்வையிடுவதற்காக வந்திருந்த வந்தோரிடையே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 போ் உயிரிழந்தனா்; 85 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களில் 11 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

41,000 போ் அமரக் கூடய இந்த மைதானத்தில் ஏற்கெனவே கடந்த 2018 இல் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட நெரிசலில் ஒருவா் உயிரிழந்தாா்; 37 போ் காயமடைந்தனா்.

தற்போது வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ள இந்தியப் பெருங்கடல் தீவுப் போட்டியில் பல்வேறு விளையாட்டுகளும் இடம் பெறும். மாலத்தீவு, மோரீஷஸ், ரியூனியன், செஷல்ஸ் போன்ற நாடுகளைச் சோ்ந்த தடகள வீரா்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றனா்.

Previous articleஇன்றைய ராசிபலன்27.08.2023
Next articleவானிலை தொடர்பான அறிவிப்பு!