வீடொன்றில் இருந்து எரிந்த நிலையில் சடலம் மீட்பு!

சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலிப்பதெனிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இலிப்பதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சுமார் மூன்று வருடங்களாக தனது சகோதரியின் வீட்டில் தங்கியிருந்த நிலையில்இ சகோதரி வீட்டில் இல்லாத நேரத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்இ சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஇலங்கையர்களின் 4 வீதமானவர்கள் நினைவு இழப்பு நோயால் பாதிப்பு!
Next articleயாழில் வறட்சியால் 22,044 குடும்பங்கள் பாதிப்பு!