மனைவியின் சகோதரியை கத்தியால் குத்திய கணவன்

பங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெதியகல பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.

நேற்று (28) இரவு இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த 25 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும், காயமடைந்த பெண்ணின் சகோதரியின் கணவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் இன்று (29) அதிகாலை அக்குரெஸ்ஸ பொலிஸாரால் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்குரெஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleகுழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Next articleகைபேசியில் பேசிக் கொண்ட சென்ற யுவதி உயிரிழப்பு!