கைபேசியில் பேசிக் கொண்ட சென்ற யுவதி உயிரிழப்பு!

கைப்பேசியில் பேசிக்கொண்டு ரயில் பாதையில் நடந்து சென்ற யுவதி ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

நேற்று (28) இரவு 07:00 மணியளவில் பாணந்துறைக்கும் பின்வத்தைக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் படுகாயமடைந்த யுவதி அதே ரயிலில் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நோயாளர் காவு வண்டி மூலம் பாணந்துறை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர் உயிரிழந்ததாக “அத தெரண” செய்தியாளர் தெரிவித்தார்.

சுமார் 22 வயது மதிக்கத்தக்க யுவதி இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

ரயில் பல தடவைகள் ஹார்ன் அடித்த போதும் உயிரிழந்த யுவதிக்கு கேட்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Previous articleமனைவியின் சகோதரியை கத்தியால் குத்திய கணவன்
Next articleமக்களை ஏமாற்றி வந்த பெண் கைது!