மணமகளை விற்பனை செய்யும் வினோத சந்தை

  பல்கேரியாவில் ஆடவர்கள் தமக்கு ஏற்ற துணையினை இலகுவாகத் தெரிவு செய்வதற்கு ”மணமகள் சந்தை ”என்ற விநோத முறை உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்கேரியா அனுமதியைப்பெற்று இந்த சந்தை இயங்கிவருவதாகவும் இதன்மூலம் ஆண்கள் தமக்குப் பிடித்தமான துணையினைத் தெரிவுசெய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல நிபந்தனைகள்

அதேவேளை அங்குள்ள ஏழைப் பெண்களுக்காக மாத்திரமே அமைக்கப்பட்டுள்ளதாகவும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்கள், திருமண வயதில் உள்ள தமது பெண்பிள்ளைகளை இச் சந்தைக்கு அழைத்து செல்வதாகவும், அங்கு வருகைவரும் ஆண்கள் தங்களுக்கு பிடித்த பெண்களை விலை கொடுத்து வாங்கி தமது மனைவியாக ஏற்று வாழ்க்கை நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இச்சந்தையில் விற்கப்படும் பெண்களை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு பல நிபந்தனைகள் உள்ளதாக கூறப்படுகின்றது.

அதாவது , பெண்களை வாங்கும் ஆண்கள் அப்பெண்ணின் சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதும், மருமகள் அந்தஸ்தை ஆணின் குடும்பத்தினர் கட்டாயம் வழங்க வேண்டும் என்பதும் கட்டாயமாக உள்லதாம்.