தனியார் பஸ்ஸிற்குள் நுழைந்து ஓட்டுநர் நடத்துனர் மீது தாக்குதல்!

  மொனராகலையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதல் சம்பவம் வெல்லவாய தனமல்வில பிரதான வீதியின் எதிலிவெவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

தனியார் பஸ்கள் பணிப் பகிஸ்கரிப்பு
எதிலிவெவ பிரதேசத்தில் பஸ்ஸை நிறுத்திய சிலர் பஸ்ஸுக்குள் நுழைந்து அதன் சாரதி மற்றும் நடத்துனர் மீது தடிகளால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து நடத்துனர், ஓட்டுர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மொனராகலை – மாத்தறை தனியார் பஸ்கள் திங்கட்கிழமை (28) பகிஷ்கரிப்பில் ஈடுபட்டன.

Previous articleமணமகளை விற்பனை செய்யும் வினோத சந்தை
Next articleயாழில் திடீரென தீ பிடித்த பட்டா வாகனம்