யாழில் திடீரென தீ பிடித்த பட்டா வாகனம்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை சந்திப்பகுதியில் சிறிய ரக லொறி ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மின் கசிவினால் வாகனம் தீப்பற்றியிருக்கலாம் என கூறப்படுகிறது. பருத்தித்துறை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த போதே குறித்த வாகனம் இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது .

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleதனியார் பஸ்ஸிற்குள் நுழைந்து ஓட்டுநர் நடத்துனர் மீது தாக்குதல்!
Next articleலிவிங் டூ கெதர் பறிபோன பெண்ணின் உயிர்