யாழ் பிரபல ஆலயம் ஒன்றில் திருட்டு

யாழிலுள்ள ஆலயமொன்றின் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர் வீரமாகாளி ஆலயத்தின் உண்டியலே உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு வசந்த மண்டபத்தில் இருந்த ஒரு தொகைப் பணமும் களவாடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் திருட்டுச் சம்பவத்துடன் ஆலயத்தில் நெருங்கிச் செயற்பட்டவர் சம்பந்தப்பட்டமை சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியாகிய நிலையில் ஆலய குருக்கள் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

Previous articleயாழில் விபரீத முடிவெடுத்த பல்கலை மாணவி
Next articleமகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரு தந்தையர்கள் கைது!