மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரு தந்தையர்கள் கைது!

  தமது மகளையே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரு தந்தையர்கள் தொடங்கொட மற்றும் மெதிரிகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடங்கொடபொலிஸாரால் கைது செய்யப்பட்ட முப்பத்திரண்டு வயதுடைய இராணுவ சிப்பாய், தனது நான்கு வயது மகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை தனது பதின்மூன்று வயது மகளை துஷ்பிரயோகம் செய்த மெதிரிகிரிய நகரில் வசிக்கும் 38 வயதான ஒருவர் செய்து செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Previous articleயாழ் பிரபல ஆலயம் ஒன்றில் திருட்டு
Next articleரணிலுக்கு ஆதரவு வழங்கும் வடிவேல் சுரேஷ்