நாடுபூராவும் நிறுவப்பட இருக்கும் ‘சினோபெக்’எரிபொருள் கிளைகள்

சீன எரிபொருள் நிறுவனமான ‘சினோபெக்’ எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் நாடு பூராகவும் தமது கிளைகளை நிறுவவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சராக காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சினோபெக் நிறுவனம் தமது முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை ஆரம்பித்துள்ளது. நாடு பூராகவும் 150 நிலையங்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 இடங்களைத் தவிர ஏனைய நிலையங்களின் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆஸ்திரேலிய யுனைடட் பெற்றிலோலிய நிறுவனமும் இவ்வருடத்துக்குள் தமது சேவையை நாட்டில் ஆரம்பிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Previous articleபிரபல போதைபொருள் வியாபாரி கைது!
Next articleவிரைவில் வெளியாக இருக்கும் உயர்தர பரீட்சை பெறுபேறுகள்