வயல் ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!

நிகவெரட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உஸ்மியாகார பகுதியில் உள்ள நெல் வயல் ஒன்றில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நிகவெரட்டிய பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (05) பிற்பகல் இந்த நிர்வாண ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

  40 முதல் 45 வயது மதிக்கத்தக்க சுமார் 05 அடி மெல்லிய உடலுடன் கூடிய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் நிகவெரட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் நிகவெரட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கடந்த சில நாட்களாக, நாட்டின் பல பகுதிகளில் அடையாளம் தெரியாத சடலங்கள் கண்டு பிடிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleகருவாடு உற்பத்தியாளர்களுக்கும் நட்டஈடு
Next articleகுளியலறை உபகரணங்களை திருடியவர்கள் கைது!