குளியலறை உபகரணங்களை திருடியவர்கள் கைது!

மன்னார், தலைமன்னார் பிரதான வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றின் குளியல் அறைகளில் இருந்து ஒரு தொகுதி குளியல் அறை உபகரணங்கள் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 2 சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (5) மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களிடமிருந்து சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான குளியல் அறை உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள்

கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் தாழ்வுபாடு மற்றும் புத்தளம் பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 58 வயதுடையவர்கள் என மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஹோட்டல் உரிமையாளரின் முறைப்பாட்டை தொடர்ந்து மன்னார் பொலிஸார் மேற்கொண்ட துரித நடவடிக்கைகளுக்கு அமைவாக செவ்வாய்க்கிழமை (5) குறித்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அவர்கள் பதுக்கி வைத்திருந்த சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரை விசாரணைகளின் பின் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Previous articleவயல் ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!
Next articleமுன்னறிவிப்பின்றி விலகும் வைத்தியர்களுக்கு எதிராக நடவடிக்கை!