விபச்சார விடுதி ஒன்றில் நால்வர் கைது!

   பேலியகொட பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது விபசார விடுதியொன்றை சுற்றிவளைத்து அங்கிருந்த நால்வரை கைது செய்துள்ளனர்.

மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமையவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மசாஜ் நிலையம் நடத்துவதாக கூறி விபசார விடுதி

மசாஜ் நிலையம் நடத்துவதாக கூறி இந்த விபசார விடுதி நடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது.

இதன்போது முருதலாவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஆண் ஒருவரும், 30, 31 மற்றும் 38 வயதுடைய நுவரெலியா, மாரவில மற்றும் பிலிமத்தலாவ பிரதேசங்களை சேர்ந்த மூன்று பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Previous articleதங்கத்தின் இன்றைய நிலவரம்
Next articleயாழில் சிறுமியின் கை விவகாரம் போராட்டத்தில் பதற்றம்!