யாழில் குழவிக் கொட்டுக்கு இலக்கான ஜவர் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணம் – பலாலி கிழக்கு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (08) குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த ஐவரும் சிகிச்சைக்காக  அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் தற்போது கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவி வருவதனால் மரங்களில் இருந்த குளவிக்கூடு கலைந்து குளவிகள் கூண்டில் இருந்து வெளியேறி தாக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.  

Previous articleதங்கத்தின் விலை அதிகரிப்பு!
Next articleஉயர்தர பரீட்சை பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்